கிராம நிர்வாக அலுவலக இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்கள்.
- கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கையில் ஊராட்சி மன்ற தலைவர் ஈடுபட்டுள்ளார்.
- போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வணிகர் சங்கத்தினர் முழு கடையடைப்பில் ஈடுபட்டனர்.
அரூர்,
அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட தீர்த்தமலை ஊராட்சியில் கட்டவடிச்சாம்பட்டி, பொய்யப்பட்டி, குரும்பட்டி, தீர்த்தமலை ஆகிய கிராமங்கள் உள்ளன.
பொய்யப்பட்டியில் உள்ள ஊராட்சி அலுவலக கட்டிடம் பழுதடைந்து உள்ளதால், புதிய கட்டிடம் கட்ட ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை, சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இதையடுத்து, அங்கு கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொய்யப்பட்டி யில் புதிதாக கட்டப்பட உள்ள ஊராட்சி அலுவலக கட்டிடத்திற்கு, தற்போது தீர்த்தமலையில் செயல் பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கையில் ஊராட்சி மன்ற தலைவர் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்த தகவல் அறிந்த பொதுமக்கள், தீர்த்தமலையில் தற்போது செயல்பட்டு வரும் அலுவலகத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும். பொய்யப்பட்டியில் கட்ட கூடாது என
கோரிக்கை வைத்து, தீர்த்தமலை பேருந்து நிலையத்தில் உண்ணாவிரத போராட்ட த்தில் ஈடுபட்டனர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வணிகர் சங்கத்தினர் முழு கடையடைப்பில் ஈடுபட்டனர்.