உள்ளூர் செய்திகள்

திப்பணம்பட்டி கிராமம் சார்பாக தங்கமகள் சேமிப்புத்திட்டத்தில் 50 பெண் குழந்தைகள் சேர்ப்பு

Published On 2023-02-21 07:41 GMT   |   Update On 2023-02-21 07:41 GMT
  • ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனிசாமி விழாவிற்கு தலைமை தாங்கினார்.
  • தங்கமகள் சேமிப்பு திட்டத்தின் பயன்கள் குறித்து செல்வபாரதி விளக்கினார்.

தென்காசி:

பெண் குழந்தைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, இந்திய அஞ்சல் துறையின் சேமிப்புத் திட்டங்களில் ஒன்றான பெண் குழந்தைகளுக்கான "தங்கமகள் சேமிப்புத் திட்டத்தில்" முதல் மாதத் தவணை ரூ.250-ஐ தளிர் திப்பணம்பட்டி கிராமம் சார்பாக பெண் குழந்தையின் பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கி 50 பெண் குழந்தைகளுக்கு தங்கமகள் சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டன. பயனாளிகளுக்கான சேமிப்பு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி திப்பணம்பட்டி அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனிசாமி தலைமை தாங்கினார். அங்கன்வாடி பொறுப்பாளர்கள் பிரேமா , பேபி மற்றும் வார்டு உறுப்பினர் சொர்ணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தளிர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் வரவேற்றார். அஞ்சல் துறை ஆய்வாளர் செல்வபாரதி கலந்து கொண்டு அஞ்சல் துறையில் உள்ள சேவைகள் குறித்தும், தங்கமகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளுக்கான பயன்கள் குறித்தும் விளக்கிப் பேசினார். விழாவில் பயானிகளுக்கு தங்கமகள் சேமிப்பு கணக்கு புத்தகம் வழங்கப்பட்டன. விழாவில் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். ஏற்பாட்டினை தளிர் நிர்வாகி வேல்முருகன் மற்றும் திப்பணம்பட்டி அஞ்சல் கிளை பொறுப்பாளர் மீனா செய்திருந்தனர்.

Tags:    

Similar News