உள்ளூர் செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நிவாரண பொருட்கள் வழங்கினார். அருகில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ வுமான தங்கமணி உள்ளார்.

பள்ளிப்பாளையத்தில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்

Published On 2022-08-07 08:38 GMT   |   Update On 2022-08-07 08:38 GMT
  • பள்ளிப்பாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்தார்.
  • மேலும் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பள்ளிப்பாளையம்:

மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் காவிரி ஆற்று பகுதியில் உள்ள ஜனதா நகர், சந்தப்பேட்டை, அக்ரஹாரம், நாட்டா கவுண்டன்புதூர் மற்றும் பல பகுதிகளில் ஏராளமான வீடுகள் பாதிக்கப்பட்டன. இந்த வீடுகளில் வசித்து வந்த மக்கள் முகாமில் தங்கு வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை நேற்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்து நிவாரணம் பொருட்கள் வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன், பள்ளிப்பா ளையம் நகர செயலாளர் வெள்ளியங்கிரி, ஒன்றிய செயலாளர் செந்தில், பேரவை செயலாளர் சுப்பிரமணி, மற்றும் ஏராள மானோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News