திண்டுக்கல்லில் டி.பி.கே.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
- சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் முதன்மை மேலாளரும், மூத்த விஞ்ஞானியுமான சிவ சுப்ரமணியன் கலந்து கொண்டார்.
- மேலும் பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வில் 4 பாடங்களில் சதம் அடித்த மாணவி சரண்யா ஸ்ரீ என்பவருக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் -மதுரை ரோடு யானைத்தெப்பம் பகுதியில் டி.பி.கே.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியின் 33வது ஆண்டு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைவர் ராஜப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் வளசுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். நாட்டாமை ராக்கி, நாட்டாமை பொன்னுலிங்க நாடார் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் முதன்மை மேலாளரும், மூத்த விஞ்ஞானியுமான சிவ சுப்ரமணியன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
விஞ்ஞானத்தில் இந்தியா அதிக வளர்ச்சி அடைந்து வருகிறது. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. உலகமே இந்தியாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது. மாணவர்கள் அறிவியல் கற்க ஆர்வம் காட்ட வேண்டும். குழந்தைகளுக்கு பெற்றோர் விஞ்ஞானம் சார்ந்த அறிவுரை வளர்க்க ஊக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வில் 4 பாடங்களில் சதம் அடித்த மாணவி சரண்யா ஸ்ரீ என்பவருக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பொருளாளர் ராஜேஷ் கண்ணன், பள்ளி முதல்வர் ரத்னகலா மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.