உள்ளூர் செய்திகள்

உக்கடத்தில் த.மு.மு.க.வினர் மறியல்

Published On 2022-09-09 09:49 GMT   |   Update On 2022-09-09 09:49 GMT
  • பொதுக்கூட்டத்துக்காக கொடிக்கம்பம் நடப்பட்டது
  • கொடிக்கம்பத்தை அகற்றியதால் போராட்டம்

கோவை, 

தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் சிறை கைதிகள் உட்பட அனைவரையும் விடுவிக்க கோரி பொதுக்கூட்டம் இன்று மாலை கோவை கோட்டைமேடு வின்சென்ட் ரோட்டில் நடைபெற உள்ளது.

இதனையொட்டி த.மு.மு.க.வினர் கோவை உக்கடம் ஆத்துப்பாலம் குனியமுத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலையோரம் கொடிக்கம்பம் நட்டு வைத்தனர்.

இந்த கொடிகளை போலீசார் அகற்றினர். இதனால் ஆத்திரமடைந்த த.மு.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் அவர்கள் கொடிகளை அகற்றிய போலீசாரை கண்டித்து உக்கடம் பைபாஸ் ரோட்டில் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட து.

இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் உக்கடம் பைபாஸ் ரோட்டில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  

Tags:    

Similar News