உள்ளூர் செய்திகள்
மீஞ்சூரில் மழை நீர் தேங்கும் இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை: கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
- மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியின் வளர்ச்சி பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
- மழை நீரை அகற்றுவதற்கு கூடுதலாக ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்.
பொன்னேரி:
மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமையில், செயல் அலுவலர் வெற்றியரசு, துணைத்தலைவர் அலெக்சாண்டர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியின் வளர்ச்சி பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள், பருவமழை தொடங்குவதற்கு முன்பு தண்ணீர் தேங்கும் தெருக்களை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் கொசு உற்பத்தியாகி நோய்கள் அதிகமாக பரவுவதற்கு வழிவகை உள்ளதாகவும், மழை நீரை அகற்றுவதற்கு கூடுதலாக ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கைகளை தெரிவித்தனர்.