உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-06-29 15:14 IST   |   Update On 2023-06-29 15:14:00 IST
  • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
  • கோபித்து கொண்டு சந்தியா தனது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் அங்கிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

தருமபுரி,

தருமபுரி அருகேயுள்ள ஆட்டுகாரம்பட்டி வீரபத்திரன் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு சந்தியா (வயது20), பிரியா என்கிற 2 மகள்கள் உள்ளனர். சந்தியா தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் சந்தியாவை, அவரது தாய் மாமாவான பி.ஜெட்டிஅள்ளியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்திக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

இதையடுத்து கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்து கொண்டு சந்தியா தனது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் அங்கிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

இதையடுத்து நேற்று சந்தியா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வீட்டில் தூக்கில் பிணமாக கிடந்த சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News