உள்ளூர் செய்திகள்

முகவரி கேட்பது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் செல்போன் பறிப்பு

Published On 2022-11-05 12:37 IST   |   Update On 2022-11-05 12:37:00 IST
  • கல்லூரி மாணவி பிரபல வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் உணவகத்தில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
  • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் பிரீதாவிடம் சென்று முகவரி கேட்பது போல் நடித்து அவரது கவனத்தை திசை திருப்பினர்.

சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் மார்கபந்து. இவரது மகள் பிரீதா, கல்லூரி மாணவி. இவர் அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் உணவகத்தில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

பிரீதா நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக கோயம்பேடு ரோகிணி தியேட்டர் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்து நின்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் பிரீதாவிடம் சென்று முகவரி கேட்பது போல் நடித்து அவரது கவனத்தை திசை திருப்பி திடீரென பிரீதாவின் கையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News