உள்ளூர் செய்திகள்

பூந்தமல்லியில் மோதல்- வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதில் 4 பேர் படுகாயம்

Published On 2023-02-07 14:44 IST   |   Update On 2023-02-07 14:44:00 IST
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னீர்குப்பத்தை சேர்ந்த ஒருவருக்கும், கடை உரிமையாளர் ராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.
  • இருதரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பூந்தமல்லி:

பூந்தமல்லியை சேர்ந்தவர் ராஜா. இவர் பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் கனரக வாகனங்கள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இங்கு வடமாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று இரவு கடைக்கு வந்த சிலர் தகராறு செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கடையில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் ஸ்பேனர், இரும்பு ராடு, உருட்டுக்கட்டைகளால் தகராறில் ஈடுபட்டவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னீர்குப்பத்தை சேர்ந்த ஒருவருக்கும், கடை உரிமையாளர் ராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் நடந்து இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக இருதரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News