உள்ளூர் செய்திகள்

54 பள்ளிகளை சேர்ந்த 5,719 குழந்தைகளுக்கு காலை உணவு

Published On 2022-07-28 09:11 GMT   |   Update On 2022-07-28 09:11 GMT
  • பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
  • இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

சேலம்:

தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை முதற்கட்டமாக சேலம் மாநகராட்சியில் உள்ள 54 பள்ளிகளில் படிக்கும் 5,719 குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்த மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், இதில் சமூக நலத்துறை ஊரக வளர்ச்சி, நகர்ப்புற நிர்வாகம், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மற்றும் உணவு பாதுகாப்பு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் இடம்பெறுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News