மத்தூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் கல்வி அமைச்சர் அன்பழகன் 100-வது நாள் விழா ஒன்றிய தி.மு.க. செயலாளர் குண வசந்தரசு தலைமையில் கொண்டாடப்பட்டது.
- மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
- ஒன்றிய பிரதிநிதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையத்தில் மறைந்த முன்னாள் கல்வி அமைச்சரும், பேராசிரியருமான அன்பழகனின் 100-வது பிறந்த நாள் விழாவையொட்டி மத்தூர் தி.மு.க. (வடக்கு) ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் குண வசந்தரசு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், முன்னாள் ஒன்றிய குழுத் துணைத் தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் தலைவரும், ஊராட்சி செயலாளருமான கமலநாதன், ஒன்றிய துணை செயலாளர் ஜீவானந்தம் ,கண்ணன்ட ஹள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.எஸ்.சங்கர்,நாகம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி கதிர்வேல், ஒட்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சந்தோஷ்குமார், கே.எட்டிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பெருமாள் மாவட்ட பிரதிநிதிகள் கோவிந்தராஜ், சாந்தமூர்த்தி, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய பிரதிநிதி தனசேகரன், கண்ணுகானூர் குமார், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.