கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
ஆதிதிராவிடர் குடியிருக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள்
- பேரூராட்சி மன்ற மாதா ந்திர கூட்டம் பேரூராட்சி தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்றது.
- பா.ம.க கவுன்சிலர் சுமித்ரா உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் பேரூராட்சி மன்ற மாதா ந்திர கூட்டம் பேரூராட்சி தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்றது.
பேரூராட்சி மன்ற மாதாந்திர கூட்டத்தில் பென்னாகரம் பேரூராட்சி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருக்கும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்திட சிறப்பு திட்டத்திற்கு உரிய முன்மொழிவு அனுப்பி வைத்தல், பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேசி நாயக்கன் ஏரி என்கின்ற (முள்ளுவாடி ஏரி) கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளவும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அனுமதி அளித்துள்ள நிலையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்வது, அரசு கட்டிடங்கள் மற்றும் உள்ளாட்சித் துறை அமைப்புகளின் கட்டிடங்கள் கட்டிட அனுமதி பெறுவது, மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கோரி இருக்கும் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ன.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கீதா முன்னிலை வகித்தார். இதில் பேரூராட்சி துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், கமலேசன்,ஷானு, யாசின்கான், அ.தி.மு.க கவுன்சிலர் ராதிகாபாய், பா.ம.க கவுன்சிலர் சுமித்ரா உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.