உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணி
- ஆலமரத்துப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி களுக்கான விழிப்புணர்வு பேரணி தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது.
- பேரணியில் 6 மற்றும் 7 வகுப்பு மாணவ மாணவிகள் மற்றும் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.
பாப்பாரப்பட்டி.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த ஆலமரத்துப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி களுக்கான விழிப்புணர்வு பேரணி தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது.
இதில் வட்டார வளமை மேற்பார்வையாளர் சரவணன், ஆசிரியர் பயிற்றுனர் வளர்மதி , சுதாகர் மற்றும் சிறப்பு பயிற்றுநர்கள் ராஜலட்சுமி, கமலேசன் குழு வளமை ஒருங்கிணைப்பாளர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேரணியில் 6 மற்றும் 7 வகுப்பு மாணவ மாணவிகள் மற்றும் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.