உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2023-01-21 15:25 IST   |   Update On 2023-01-21 15:25:00 IST
  • விழிப்புணர்வு ஊர்வலம் கிருஷ்ணகிரி பழையபேட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது.
  • கணக்காளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை, கிருஷ்ணகிரி வட்டார வளமையம் மற்றும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கிருஷ்ணகிரி பழையபேட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது.

இதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தலைமை தாங்கி தொடங்கி வட்டாரக் கல்வி அலுவலர்கள் செல்வராஜ், சீனிவாசன், தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக், பள்ளியின் தலைமை ஆசிரியர் சூசைநாதன், ஆசிரியர் பயிற்றுநர்கள், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பாசிரியர்கள், கணக்காளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஊர்வலம் குப்பம் சாலை, மீன் மார்கெட், நேதாஜி சாலை வழியாக மீண்டும் பள்ளியை சென்றடைந்தது. அப்போது பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியதுடன், கல்வி கற்க வயது தடையில்லை. 15 வயதிற்கு மேல் கல்வி கல்லாதோர் இத்திட்டத்தில் சேரலாம். ஆண்கள், பெண்கள் சேர்ந்து பயன்பெறலாம். சிறந்த தன்னார்வலர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்.

ஆண்டு இறுதியில் கற்போருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். கற்போருக்கு ஏற்ற இடத்தில், ஏற்ற நேரத்தில் வகுப்புகள் நடத்தப்படும். நம் நாட்டில் கல்லாதவர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

Tags:    

Similar News