உள்ளூர் செய்திகள்

தீக்குளிக்க முயன்ற பெண்ணை தடுத்து போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

குடியிருக்கும் நிலத்தை அபகரிக்க முயற்சி: பஞ்சாயத்து துணை தலைவரை கண்டித்து தீக்குளிக்க முயன்ற பெண்

Published On 2022-09-26 09:22 GMT   |   Update On 2022-09-26 09:22 GMT
  • இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி இன்று தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கலையரசி தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டார்.
  • கலெக்டர் அலுவலகம் எதிரில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது ‌

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த மிட்டா நூலஅள்ளி அருகே உள்ள எம். சவுளூர் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி கலையரசி (வயது 32).

இவர்கள் 25 வருடமாக அந்தப் பகுதியில் உள்ள 7 சென்ட் நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருவதாகவும் அந்த இடத்தை மிட்டாநூல அள்ளியின் பஞ்சாயத்து துணைத் தலைவர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்து வருவதாகவும், வீட்டில் இருந்து வெளியேறாமல் இருப்பதற்காக வீட்டை சுற்றி வேலி அமைத்து தொல்லை தருவதாகவும் இது சம்பந்தமாக தருமபுரி கலெக்டர் மற்றும் எஸ்.பி. அலுவலகம், பொருளாதார குற்றப்பிரிவு, அதியமான் கோட்டை காவல் நிலையம், உள்ளிட்ட இடங்களில் மனு கொடுத்தோம்.

இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி இன்று தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கலையரசி தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அருகில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்ட ர்.

கலெக்டர் அலுவலகம் எதிரில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது ‌

Tags:    

Similar News