உள்ளூர் செய்திகள்

ரத்ததான முகாமை கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தஞ்சையில், ரத்ததான முகாம்

Published On 2023-05-09 08:38 GMT   |   Update On 2023-05-09 08:38 GMT
  • ரெட்கிராஸ் மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.
  • ஆட்டோ டிரைவர்களுக்கு ரெட்கிராஸ் சுகாதார பெட்டகம் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்:

உலக ரெட்கிராஸ் தினத்தில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தஞ்சாவூர் மாவட்ட கிளைக்கு கடந்த ஆண்டு பல்வேறு வகையில் உதவிகள் புரிந்த பாரத ஸ்டேட் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, ஐசிஐசிஐ பவுண்டேஷன், ஆர்கிடெக் அருண் பாலாஜி, துணை இயக்குனர் சுகாதாரம் டாக்டர் நமச்சிவாயம், பேரிடர் வட்டாட்சியர் ராஜேஸ்வரி, மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் டாக்டர் வேல்முருகன், மத்திய மருந்து ஆய்வாளர் கவியரசன், முதல் நிலை மருந்து ஆய்வாளர் சுபத்ரா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தி ரன், இன்ஸ்பெக்டர் சந்திரா, மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

முன்னதாக இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி வளாகத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்)டாக்டர் சுகபுத்ரா, ரெட்கிராஸ் கொடியினை ஏற்றி வைத்து, ரெட்கிராஸ் இயக்கத்தை தோற்றுவித்த ஜீன்ஹென்றிடூனாந் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரெட்கிராஸ் சுகாதார பெட்டகத்தினை வழங்கினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரத்ததான முகாமினை தொடங்கி வைத்தார்.

உலக ரெட்கிராஸ் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜூனியர் ரெட்கிராஸ் மாணவர்களுக்கு தனித் திறன் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் யூத் ரெட்கிராஸ் மாணவர்களிடம் ரெட்கிராஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் ரெட்கிராஸ் வளாகத்தில் பொதுமக்களுக்கு நீர் மோரும், அரசு ராசாமிராசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் இசிஆர்சி மையத்தில் பராமரிப்பில் உள்ள மனநலம் குன்றிய நபர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ரெட்கிராஸ் உறுப்பினர்கள் டாக்டர். ராதிகா மைக்கேல், டாக்டர். சிங்காரவேலு, டாக்டர். தமிழரசன், ஜெயக்குமார், அரிஸ்டோ வீரா, ஸ்டாலின் பாபு, கோவி மோகன், முனைவர் பிரகதீஷ், ஜான்ஸ்டீபன், செல்வராணி, பயோகேர் முத்துக்குமார், இரத்த வங்கி மருத்துவர் டாக்டர் ராஜ்குமார், ரெட்கிராஸ் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ரெட்கிராஸ் துணை சேர்மன் பொறியாளர். முத்துக்குமார் வரவேற்றார். பொருளாளர் சேக் நாசர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News