உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு மேல் மாடுகள் விற்பனை

Published On 2023-01-13 10:01 GMT   |   Update On 2023-01-13 10:01 GMT
  • ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட மாட்டுசந்தை உள்ளது,
  • கேரளாவைச் சேர்ந்த மாட்டு வியாபாரிகள் அதிகளவில் இந்த வார சந்தைக்கு வந்திருந்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட மாட்டுசந்தை உள்ளது, வாரத்தில் வெள்ளிக்கிழமை கூடும் இந்த சந்தைக்கு கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி ,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும், அண்டை மாநிலம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மாநிலம் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள், இங்கு வந்து மாடுகளை வாங்கிச்செல்வது வழக்கம். இந்த வாரம் கேரளாவைச் சேர்ந்த மாட்டு வியாபாரிகள் அதிகளவில் இந்த வார சந்தைக்கு வந்திருந்தனர்.

கேரள வியாபாரிகள் வருகையால் உள்ளூரை சேர்ந்த விவசாயிகள் அதிகளவு மாடுகளை விற்பனை செய்தனர். சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாடுகள் இன்று விற்பனையாகியது.

சந்தையில் பசு மாடுகளின் விலை சுமார் 30,000 முதல் 60,000 வரை விற்பனையான நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுமாடுகள் மற்றும் விவசாயிகள் வருகையால் சந்தை களைகட்டியது. வெளிமாநில விற்பனையாளர்கள் என சந்தையில் வியாபாரம் மொத்தம் சுமார் 2 கோடிக்கு மேல் விற்பனையானதால் தொடர்ந்து விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேபோல பொங்கல் பண்டிகை என்பதால் மாடுகளுக்கு அழகு சேர்க்கும் விதமாக புதியதாக மாட்டுக் கயிறுகள், குஞ்சம், மணிக்கயிறுகள் உள்ளிட்டவை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர் .

Tags:    

Similar News