உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரியில்அறிவியல் கண்காட்சி

Published On 2023-02-19 09:40 GMT   |   Update On 2023-02-19 09:40 GMT
  • 25-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து மா ணவர்கள் இக்கண்கா ட்சியைப் பார்வையிட்டு பயனடைந்தனர்.
  • கல்லூரி சார்பாக அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

மத்தூர், 

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் (தன்னாட்சி) கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையமும் ஒருங்கிணைந்து 2 நாட்கள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

அறிவியல் மற்றும் கலைக் கண்காட்சியினை ஸ்ரீ வித்யா மந்திர் கல்விக் குழுமங்களின் நிறுவனர் சந்திரசேகரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்விற்கு பெரியார் பல்கலைகழக இயற்பியல் துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் குமாரதாஸ், தலைவர் ஜலஜா மதன் மோகன், கல்லூரியின் செயலர் அருண்குமார் மற்றும் கல்லூரி முதல்வர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்வாணையர் சுரேஷ் வாழ்த்துரை வழங்கினார்.

கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து மா ணவர்கள் இக்கண்கா ட்சியைப் பார்வையிட்டு பயனடைந்தனர்.

கல்லூரி சார்பாக அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு பள்ளிக்கும் கல்லூரி பேருந்து மூலம் மாணவர்களை அழைத்து வந்து மீண்டும் கண்காட்சி முடிந்தவுடன் பாதுகாப்பாக அப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்விழாவினைக் கல்லூரி கணினி துறைத் தலைவர்கவிதா, கணிதத் துறைத் தலைவர் ராகவன், இயற்பியல் துறைத் தலைவர்அறிவுச்செல்வி, வேதியியல் துறைத் தலைவர்கார்த்திகேயன் மற்றும் அறிவியல் அதிகாரி பார்த்திபன், மூத்த தொழில் நுட்பவியலாளர்உதயகுமார் மற்றும் மூத்த அறிவியல் உதவியாளர் ராமு ஆகியோர் இக்கண்காட்சியினை ஒருங்கிணைந்து நடத்தினர். 

Tags:    

Similar News