உள்ளூர் செய்திகள்

மாரண்டஅள்ளி கிளை நூலகத்தில் 55-வது தேசிய நூலக வார விழா

Published On 2022-11-18 09:33 GMT   |   Update On 2022-11-18 09:33 GMT
  • 55-வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது.
  • மாணவர்களிடம் தனது நூலக அனுபவங்களை பற்றி எடுத்துரைத்தார்.

மாரண்ட‌அள்ளி,

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி கிளை நூலகத்தில் 55-வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. இதில் நூலகர் தமிழ்ச்செல்வி அனைவரையும் வரவேற்று பேசினார். இவ்விழாவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டியில் கலந்து கொண்ட 25 மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் பரிசு பொருட்களை வழங்கி மாணவர்களுக்கு சிறப்புரை யாற்றினார்.

இதில் மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாரண்ட‌அள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் மகேஷ் பேசுகையில் மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்தும் பழக்கத்தை சிறுவயதிலிருந்து பின்பற்ற வேண்டும். மேலும் போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் நூலகத்தில் உள்ள அரிய நூல்களை படித்து வெற்றி பெற வேண்டும் என மாணவர்களிடம் தனது நூலக அனுபவங்களை பற்றி எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆசிரி யர்கள், மாணவர்கள், புரவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News