உள்ளூர் செய்திகள்

ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

Published On 2023-06-06 15:06 IST   |   Update On 2023-06-06 15:06:00 IST
  • காவேரி கூக்குரல் ஆகிய அமைப்புகளின் சார்பில், மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது.
  • முன்னதாக, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன் வரவேற்றார்.

ஓசூர்,

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மண் காப்போம் மற்றும் ஈஷா காவேரி கூக்குரல் ஆகிய அமைப்புகளின் சார்பில், மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது.

ஓசூர் அதியமான் பொறியியற் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா சிறப்பு விருத்தினராக கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கிவைத்தார். மேலும், இதில் சிறப்பு விருந்தினர்களாக, ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.கே.ஏ.மனோகரன், அதியமான் பொறியியற் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவில் பேசினர். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தொல்லியல் கண்காட்சியையும் சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர்.

முன்னதாக, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன் வரவேற்றார். இதில், கனிம வளத்துறை உதவி இயக்குனர் வேடியப்பன், வக்கீல் ஆனந்தகுமார்,ரோட்டரி கவர்னர் ராகவன்,தொழிலதிபர்கள், குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியையொட்டி, மாவட்டம் முழுவதும் 2, 10,000 மரக்கன்றுகள் நடப்பட்டது.

Tags:    

Similar News