உள்ளூர் செய்திகள்

வெவ்வேறு இடங்களில் டிரைவர்கள் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2022-11-17 15:20 IST   |   Update On 2022-11-17 15:20:00 IST
  • மதுகுடிக்கும் பழக்கம் உள்ள இவருக்கு தீராதவயிற்று வலி பிரச்சினை இருந்து வந்தது.
  • விரக்தியடைந்து நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி அடுத்துள்ள உழிரனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது54). லாரி டிரைவரான இவருக்கு திருமணமாகவில்லை. மதுகுடிக்கும் பழக்கம் உள்ள இவருக்கு தீராதவயிற்று வலி பிரச்சினை இருந்து வந்தது. இதனால் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதனால் விரக்தியடைந்து நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதே போல் பாகலூர் அடுத்துள்ள பாலவள்ளப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். டிரைவரான இவருக்கு மது அருந்து பழக்கம் உள்ளது.

இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று மது அருந்தி வந்த சந்தோசை மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சந்தோஷ் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

Similar News