உள்ளூர் செய்திகள்

பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது

Published On 2022-08-28 15:01 IST   |   Update On 2022-08-28 15:01:00 IST
  • பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது செய்யப்பட்டார்.
  • ஆசை வார்த்தைகள் கூறி, அவரை பலமுறை பலாத்காரம்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள செட்டித்திருகோணம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(வயது 60). இவர், மன வளர்ச்சி குன்றிய 35 வயது பெண் ஒருவரிடம், ஆசை வார்த்தைகள் கூறி, அவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணின் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்தபோது, அந்த பெண் 6 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்த பெண்ணின் தாய், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிந்து ராஜமாணிக்கத்தை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News