உள்ளூர் செய்திகள்

கொடியேற்றம்.

திருவையாறு ஆஞ்சநேயர் கோயிலில் அனுமத் ஜெயந்தி கொடியேற்றம்

Published On 2022-12-15 15:04 IST   |   Update On 2022-12-15 15:04:00 IST
  • அனுமத் ஜெயந்தி மகா அபிஷேகம் மற்றும் 24ந்தேதி மூலவர் வெண்ணெய்க் காப்பு நடக்கிறது.
  • தினமும் இரவு சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

திருவையாறு:

திருவையாறு பாவாசாமி அக்ரஹாரத்தில் எழுந்தருள்வதும், சத்குரு தியாகராஜர் சுவாமிகள் வழிபட்டதுமான ஸ்ரீஆஞ்ச நேயர் கோயிலில் அனுமத் ஜெயந்தி உற்சவம் நேற்று காலையில் கொடியேற்ற த்துடன் தொடங்கியது. இரவு சூரிய பிரபை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி வீதிஊலா நடந்தது.

முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அரங்கா ரம் மற்றும் ஆராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள்பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து தினமும் இரவு சுவாமி திருவீதி உலா நடக்கிறது. 17ந்தேதி மூலவருக்கு வடைமாலை சாற்று அலங்காரமும், 18ந்தேதி ஏகதின லெட்சார்ச்சனையும், 22-ந்தேதி திருத்தே ரோட்டமும், 23ந்தேதி தீர்த்தவாரி, அனுமத் ஜெயந்தி மகா அபிஷேகம் மற்றும் 24ந்தேதி மூலவர் வெண்ணெய்க் காப்பு நடக்கிறது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை திருவையாறு பாவாசாமி அக்ரஹாரம் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி கோயில் பரம்பரை அறங்காவலர் குருமூர்த்தி மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News