உள்ளூர் செய்திகள்

  தருமபுரி எஸ்.பி அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் உறுதிமொழி ஏற்று கொண்ட போது எடுத்த படம். 

எஸ்.பி அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

Published On 2023-06-16 09:31 GMT   |   Update On 2023-06-16 09:31 GMT
  • போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
  • போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்றது.

தருமபுரி,

தருமபுரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியான இந்திய குடிமகன் குடிமகளாகிய நான் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும், காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிபேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பஸ் போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கெதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன் என உறுதிமொழியினை எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதம் வாசிக்க ஏடிஎஸ்பி இளங்கோவன் மற்றும் போலீசார் அமைச்சுப் பணியாளர்கள் உடன் வாசித்தனர். 

Tags:    

Similar News