உள்ளூர் செய்திகள்

தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

அங்கன்வாடி ஊழியர்களின் தொடர் போராட்டம் வாபஸ்

Published On 2023-04-26 09:08 GMT   |   Update On 2023-04-26 09:08 GMT
  • 2 கோரிக்ைககளை நிறைவேற்ற அமைச்சர் உறுதியளித்ததாக வந்த தகவலையடுத்து ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
  • அமைச்சருக்கு நன்றி தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தருமபுரி,

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவ–லகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர் போராட்டம்

பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவதுபோல, அங்கன்வாடி மையங்களுக்கும் கோடை விடுமுறையை ஒரு மாதகாலமாக வழங்கிட வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு அரசு வழங்கும் சிலிண்டர் தொகையை பில்லில் உள்ளது போல் முழுத்தொகையையும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை முதல் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று தருமபுரி மாவட்டம் சார்பில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மாவட்ட கலெக்டர் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் விடிய. விடிய இன்று காலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி போலீசார் நேற்று இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வாபஸ்

தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் இன்று மதியம் அமைச்சர் கீதாஜீவனிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதுகுறித்து தகவல் அறியாத தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராடி கொண்டிருந்தவர்கள் சிறிது நேரம் கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்ெதாடர்ந்து அவர்களுக்கு தங்களது 2 கோரிக்ைககளை நிறைவேற்ற அமைச்சர் உறுதியளித்ததாக வந்த தகவலையடுத்து ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். பின்னர் அவர்கள் 1 மணியளவில் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போராட்டம் வாபஸ் என்று அறிவிப்பு வெளி வந்த பிறகும் சிறிதுநேரம் தருமபுரியில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News