உள்ளூர் செய்திகள்

சேதமடைந்த அம்மன் சிலை

சாணார்பட்டி அருகே அம்மன் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள்

Published On 2022-08-13 13:43 IST   |   Update On 2022-08-13 13:43:00 IST
  • சாணார்பட்டி அருகே கூவனூத்து ஊராட்சி கவராயப்பட்டி செங்குளத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.
  • அம்மன் சிலையின் 2 கைகளும் சேதமடைந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

குள்ளனம்பட்டி:

சாணார்பட்டி அருகே கூவனூத்து ஊராட்சி கவராயப்பட்டி செங்குளத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அஞ்சுகுழிப்பட்டி, சாணார்பட்டி, கோணப்பட்டி, நொச்சிஓடைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். கோவில் பூசாரிகளாக சுப்பிரமணி, குப்புசாமி ஆகியோர் உள்ளனர்.

நேற்று ஆடி வெள்ளிஎன்பதால் அதிகளவில் பக்தர்கள் வந்திருந்தனர். கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் இரவில் கோவிலை பூட்டிச்சென்றனர்.

சேதம்

இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் கோவிலில் உள்ள அம்மன் சிலையின் 2 கைகளும் சேதமடைந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு ஒரு பேப்பரில் தகாத வார்த்தையில் எழுதி வைத்துச்சென்றுள்ளனர். இதுகுறித்து சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் அம்மன் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News