உள்ளூர் செய்திகள்

லஞ்சம் வாங்கியதாக புகார்; தஞ்சை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

Published On 2023-08-18 09:43 GMT   |   Update On 2023-08-18 09:43 GMT
  • ஒரு நகைக்கடைக்காரரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.
  • இன்ஸ்பெக்டர் கருணாகரன் நேற்று ஆயுதப்படைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்:

தஞ்சை கீழவாசல் வெள்ளப் பிள்ளையார் கோவில் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சயனைடு கலந்த மதுபானம் குடித்த இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த சம்பவம் குறித்து

தஞ்சாவூர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றி வந்த கருணாகரன் என்பவர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இது தொடர்பாக நகைக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களிடம் கருணாகரன் விசாரணை நடத்தினார்.

அப்போது தஞ்சாவூரை சேர்ந்த ஒரு நகைக்கடைக்காரரிடம் ரூ.50,000 லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் விசாரணை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் நேற்று ஆயுதப்படைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதனால் தற்போது கிழக்கு போலீஸ் நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டராக மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா கூடுதலாக கவனித்து வருகிறார்.

கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த கருணாகரன் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News