வேளாண்துறை மாணவர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தபோது எடுத்த படம்.
காந்திகிராம பல்கலைக்கழக வேளாண்துறை மாணவர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி
- காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. வேளாண்மை இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் விவசாயிகளை சந்தித்து பயிற்சி அளித்தனர்.
- இப்பயிற்சி முகாமில் தமிழக அரசின் உழவன் செயலி பற்றிய முக்கியத்துவத்தையும், அதனை எவ்வாறு இயக்குவது பற்றியும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
சின்னாளப்பட்டி:
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. வேளாண்மை இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் 6 மாத காலம் கிராமங்களில் தங்கி விவசாயிகளை நேரில் சந்தித்து பல்வேறு பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் பெற்று வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக மாணவர்கள் அருண்குமார், விஷ்வா, அரவிந்த், அஸ்வின், நிவேதன், கனிஷ்கர் ஆகியோர் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள மாங்கரை, அம்மாப்பட்டி ஆகிய கிராமங்களில் தங்கி விவசாயிகளோடு இணைந்து பல்வேறு வகையான பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.
இப்பகுதியில் அதிகமாக பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தை அதிகளவு தாக்கும் படைப்புழுவை எவ்வாறு இயற்கையான முறையில் கட்டுப்படுத்தி தடுக்கும் வழி முறைகள் பற்றியும், வேதி உயிர்கொல்லி மருந்துகளை குறைப்பது பற்றியும், மண்ணின் ஊட்டச்சத்தை சிதைக்காமல் மண்ணை நிலையாக பாதுகாப்பது உள்ளிட்ட பயிற்சிகளை விவசாயிகளுக்கு மாணவர்கள் அளித்தனர்.
இப்பயிற்சி முகாமில் தமிழக அரசின் உழவன் செயலி பற்றிய முக்கியத்துவத்தையும், அதனை எவ்வாறு இயக்குவது பற்றியும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.