உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் அ.தி.மு.க. ( ஓ.பி.எஸ் அணி ) சார்பில் ஆர்ப்பாட்டம்.

தஞ்சையில் அ.தி.மு.க (ஓ.பி.எஸ் அணியினர்) ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-01 09:51 GMT   |   Update On 2023-08-01 09:51 GMT
  • கோடநாடு பங்களாவில் நடந்த கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.
  • தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்:

கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பான சம்பவத்தில் குற்றவாளிகளை உடனே தண்டிக்கக்கோரியும், இது குறித்து தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க ( ஓ. பன்னீர்செல்வம் அணி ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அ.ம.மு.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அதன்படி தஞ்சை ரயிலடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓ. பன்னீர்செல்வம் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி, மாநகர மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க. ( ஓ.பி.எஸ் அணி ) வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் ஓ. பன்னீர்செல்வம் அணியின் சட்டமன்ற தொகுதி செயலாளர் சத்யராஜ், பகுதி செயலாளர்கள் அறிவுரை நம்பி, ரமேஷ், சாமிநாதன் ,சண்முக பிரபு, திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினுபாலன்,

ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், செந்தில், முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன், அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் வீரராஜ், தொகுதி செயலாளர் மோகன்தாஸ், ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன், கவுன்சிலர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மகளிர் அணி செயலாளர் அமுதா ரவிச்சந்திரன், அ.ம.மு.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் வேலு கார்த்திகேயன், மாணவர் அணி செயலாளர் வக்கீல் நல்லதுரை, பூக்கார தெரு பகுதி செயலாளர் செந்தில் குமார், ஒன்றிய செயலாளர் மனோகரன், வேலாயுதம், கவுன்சிலர் கன்னுக்கினியாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News