உள்ளூர் செய்திகள்

 பாப்பிரெட்டிப்பட்டியில் வட்டாட்சியர், காவல்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூலைகள் மீது நடவடிக்கை

Published On 2023-03-22 15:39 IST   |   Update On 2023-03-22 15:39:00 IST
  • அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
  • வருவாய்த் துறையின் அனுமதி பெற்று செங்கல் சூளை நடத்துவதற்கு விரைந்து அனுமதி கடிதம் பெற வேண்டும்.

பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பொம்மிடி, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, மஞ்சவாடி, வே.முத்தம்பட்டி, போன்ற பகுதிகளில் மலைப்பகுதிகள் குன்றுகள் அதிக அளவில் இருப்பதால் செங்கல் தயாரிப்பதற்கான செம்மன் தரமான முறையில் கிடைத்ததால், தினம் தினம் செங்கல் சூளைகள் அதிக அளவில் செயல்படுத்த தொடங்கியது.

இந்த செங்கல் சூலைகள் கிராம நிர்வாக அதிகாரி, தாசில்தார், கனிமவளத்துறை போன்றவர்களின் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக நடைபெற்று வருவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தது.

இதனையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் 96 சூளைகளுக்கு மேல் செயல்படுவதாகவும், 3 சூளைகள் மட்டுமே அரசியல் அனுமதி பெற்று நடைபெற்று வருவதும் ஆய்வில் தெரியவருகிறது.

இந்த சட்டவிரோத நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் சுப்பிரமணி தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர்கள் கமருதீன், சேரன், பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் லதா, ஏ. பள்ளிப்பட்டி , கோபிநாதம்பட்டி, மொரப்பூர் காவல் நிலைய ஆய்வாளர்கள், பொ,மல்லாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி, தென்கரைக்கோட்டை வருவாய் ஆய்வாளர்கள், வருவாய் துறையை சேர்ந்த 45 கிராம நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது, செங்கல் சூளை உரிமையாளர்கள், கனிமவளத்துறை, வருவாய்த் துறையின் அனுமதி பெற்று செங்கல் சூளை நடத்துவதற்கு விரைந்து அனுமதி கடிதம் பெற வேண்டும். அதற்கு கால அவகாசம் தருவது, மீறியும் செயல்படும் செங்கல் சூளைகள் மீது கடுமையான நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும் என ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Tags:    

Similar News