உள்ளூர் செய்திகள்
ஓசூர் அருகே விபத்து பெற்றோர் கண்முன்னே 3 வயது குழந்தை சாவு
- குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.
- சம்பவ இடத்திலேயே குழந்தை அனிகா உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி,
ஓசூர் சிப்காட் பகுதியை சேர்ந்தவர் ராதே.இவரது மனைவி அருணா. இவர்களது 3 வயது குழந்தை அனிகா . ராதே தனது மனைவி, குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அட்டக்குறிச்சி என்ற இடத்தருகே அவர்கள் சென்றபோது அவ்வழியாக சென்ற ஒரு லாரி சிக்னல் போடாமல் திடீரென திரும்பியுள்ளது.
இதில் நிலைதடுமாறி ராதே குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை அனிகா உயிரிழந்தது.
ராத்தேவும் அவரது மனைவி அனிதாவும் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.