உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு.

அறம்வளர்த்த நாயகி அம்மனுக்கு ஆடிப்பூர சிறப்பு வழிபாடு

Published On 2022-08-01 09:59 GMT   |   Update On 2022-08-01 09:59 GMT
  • ஆடிப்பூர நாயகி ஆண்டாள் ஐக்கியமான விஷ்ணுவின் அம்சத்தில் அருள்பாலிப்பவர் என்பதும், உற்சவர் ஆடிப்பூர அம்மன் என்பதும் சிறப்புடையது.
  • திருவையாறு புஷ்யமண்டபத்துறை காவிரி ஆற்றில் ஆடிப்பூர அம்மனின் தீர்த்தவாரியும், வீதியுலாவும் நடைபெற்றது.

திருவையாறு:

தருமையா தீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 23-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9-ம் நாளில் நேற்று பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்த தேரோட்டம் நடைபெற்றது.

10-ம் நாளான இன்று ஆடிப்பூர திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அறம்வளர்த்த நாயகி உடனாகிய அறம்வளர்த்த நாயகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த அம்மன் ஆடிப்பூர நாயகி ஸ்ரீஆண்டாள் ஐக்கியமான விஷ்ணுவின் அம்சத்தில் அருள்பாலிப்பவர் என்பதும், உற்சவர் ஆடிப்பூர அம்மன் என்பதும் சிறப்புடையது.இதையடுத்து திருவையாறு புஷ்யமண்டபத்துறை காவிரி ஆற்றில் ஆடிப்பூர அம்மனின் தீர்த்த வாரியும், திருவீதி உலாவும் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இன்றிரவு சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் திருமுறைகள் பாடியவாறும், தவில், நாதஸ்வர இசையுடனும், கயிலை வாத்திய இசை முழக்குடனும், பரதநாட்டியக் கலை இசை நிகழ்ச்சியுடனும் அம்மன் கோயில் வெளிப்பிரகாரத்தை பக்தர்கள் ஏழு முறை சுற்றி வரும் சப்தப்பிரதட்சணம் நடக்கிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News