உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர பெருவிழாவையொட்டி நடந்த கஞ்சிவார்த்தலை லட்சுமணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.அருகில் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க மாவட்ட தலைவர் ஜெயபாலன் உள்ளார்.

ஆடிப்பூர விழா விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் பாலாபிஷேகம்- அன்னதானம்

Published On 2022-08-15 08:49 GMT   |   Update On 2022-08-15 08:49 GMT
  • ஆடிப்பூர விழா விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் பாலாபிஷேகம்- அன்னதானம் வழங்கப்பட்டது.
  • ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க விழுப்புரம் மாவட்ட தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கி சக்தி கொடியை ஏற்றி வைத்தார்.

 விழுப்புரம்:

விழுப்புரம் ஆதிபராசக்தி கோவிலில் 13-ம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆடிப்பூர பெருவிழாவிழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் மிகவும் பிரசித்தி பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அதுபோல் இந்த ஆண்டு 13-ம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா நடைபெற்றது. இவ்விழா அதிகாலை 4 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது. பின்னர் 4.30 மணிக்கு கருவறை அன்னைக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, காலை 7 மணிக்கு சக்தி கொடியேற்றுதல் நடைபெற்றது.ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க விழுப்புரம் மாவட்ட தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கி சக்தி கொடியை ஏற்றி வைத்தார். கஞ்சிவார்த்தல்- பாலாபிஷேகம் அதன் பிறகு கஞ்சி வார்த்தலும், கருவறை அன்னைக்கு பாலாபிஷேகமும் நடந்தது.

இதனை டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கஞ்சி வார்க்கப்பட்டு ஆயிரக்க ணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். விழாவில் அரசு வக்கீல் சுப்பிர மணியன், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட செயலாளர் மூர்த்தி, பொருளாளர் ரத்தின சிகாமணி, துணை த்தலைவர் ராமமூர்த்தி, வேள்விக்குழு மாவட்ட பொறுப்பாளர்கள் திரிபுரசுந்தரி, மணிவாசகம், வட்டத்தலைவர்கள் பழனி, தர்மலிங்கம், சிகாமணி, மோகனகிருஷ்ணன், மணிகண்டன், மகாலிங்கம், முனுசாமி, முன்னாள் தலைவர் பழனிச்சாமி, வேள்விக்குழு நிர்வாகிகள் கார்த்திகேயன், மாரிமுத்து மற்றும் ஒன்றிய தலைவர்கள், மன்ற தலைவர்கள், வேள்விக்குழு தொண்டர்கள், செவ்வாடை பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை சித்தர் சக்தி பீட தலைவர் வசந்திசம்பத், துணைத்தலைவர் பார்வதி அம்மாள், பொருளாளர் சாவித்திரி லட்சுமி நாராயணன், முன்னாள் தலைவர் சீத்தாராமன், முன்னாள் பொருளாளர் சண்முகம் மற்றும் சக்தி பீட அனைத்து தொண்டர்களும் செய்திருந்தனர்.

Tags:    

Similar News