உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்குகிறது வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம்

Published On 2022-07-28 05:22 GMT   |   Update On 2022-07-28 05:22 GMT
  • இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • இந்த திருத்தசட்டம் வருகிற 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

தேனி:

இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவரும் தங்களது ஆதார் அட்டை குறித்த விபரங்களை வாக்காளர் பதிவு அலுவலருக்கு படிவம் 6பி-ல் தெரிவிக்கவேண்டும்.

இந்த திருத்தசட்டம் வருகிற 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதன் நோக்கம் வாக்காளர் அடையாளத்தை மேம்படுத்தவும், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை அங்கீகரிக்கவும், மற்றும் ஒரு வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை அடையாளம் காணவும் உதவும். ஆதார் எண்ணை தெரிவிப்பது வாக்காளர் தாேன முன்வந்து செய்கின்ற விருப்பமான செயலாகும்.

எனவே வாக்காளர்கள் ஆன்லைன் மூலம் இந்த பதிவை மேற்கொள்ளலாம். அல்லது வருகிற 1-ந்தேதி முதல் வீடு தேடி வரும் வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் தங்களது சுயவிருப்பத்துடன் ஆதார் எண்ணை தெரிவித்து கருடா செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் சிறப்பு முகாம் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களிலும் அதற்குரிய படிவத்தில் சமர்ப்பிக்கலாம். எனவே அனைத்து வாக்காளர்களும் இச்சேவையை பயன்படுத்தி தங்களது பதிவினை அங்கீகரித்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News