உள்ளூர் செய்திகள்

லாரியில் கடத்திய 4300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2023-05-22 09:45 GMT   |   Update On 2023-05-22 09:45 GMT
  • வாகனத்தில் 86 மூட்டைகளில் சுமார் 4300 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தருமபுரி,

ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் வழிகாட்டுதல்படி தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் தலைமை காவலர்கள் வேணுகோபால் மற்றும் கோவிந்தன் ஆகியோர் பென்னாகரம் முள்ளுவாடி பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது முஸ்லீம் சுடுகாடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தில் 86 மூட்டைகளில் சுமார் 4300 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.

அப்போது வாகனத்தில் இருந்த ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். பிறகு விசாரணை செய்ததில் தப்பி ஓடிய நபர் பாலக்கோட்டை சேர்ந்த யாக்கோபு சாய்பு மகன் முஜமில் (28), அரிசி கடத்தலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளான பாலக்கோடு பகுதியை சேர்ந்த நவாப் ஜான் மகன் இம்ரான், நூருல்லா மகன் நவாப் ஜான் மற்றும் பென்னாகரம் மகபூப் பாஷா ஆகியோர் மீது சிவில் சப்ளை சிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News