உள்ளூர் செய்திகள்

நிலம் மீட்கப்பட்ட பகுதியில் அதிகாரிகள்.

மாமல்லபுரம் அருகே அரசுக்கு சொந்தமான 40 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் போலீஸ் பாதுகாப்புடன் மீட்பு

Published On 2022-12-16 17:27 IST   |   Update On 2022-12-16 17:27:00 IST
  • அதிகாரிகள் பலமுறை அகற்றும்படி எச்சரித்தும், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.
  • பொக்லைன் வைத்து ஆக்கிரமிப்பு கட்டுமானம் மற்றும் குடில்களை இடித்து தள்ளினர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கடற்கரையோரம் அரசுக்கு சொந்தமான 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 40 சென்ட் நிலத்தை அப்பகுதியில், கெஸ்ட் அவுஸ் நடத்தும் சென்னையை சேர்ந்த நபர் ஆக்கிரமித்து வைத்திருந்தார். வருவாய்த்துறை அதிகாரிகள் பலமுறை அகற்றும்படி எச்சரித்தும், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.

இந்நிலையில் அங்கு கட்டுமானம் கட்டப்பட்டு, குடில் போட்டிருப்பதாக தகவலரிந்த திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகரன், மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், வருவாய் ஆய்வாளர் ரகு, வி.ஏ.ஓ முனுசாமி உள்ளிட்ட அதிகாரிகள் இன்று மதியம் அங்கு சென்று, பொக்லைன் வைத்து ஆக்கிரமிப்பு கட்டுமானம் மற்றும் குடில்களை இடித்து தள்ளினர். மின் இணைப்பு இருந்ததையும் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு கானப்பட்டது.

Tags:    

Similar News