உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

வேடசந்தூர் அருகே தலைமறைவு குற்றவாளிகள் 40 பேர் கைது

Published On 2022-10-28 13:27 IST   |   Update On 2022-10-28 13:27:00 IST
  • மாவட்ட எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி. உத்தரவின் பேரில் வடமதுரை இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் ஜாமீனில் வந்து தலைமறைவானர்கள் உள்பட 40 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
  • குற்றச்சம்பவங்கள் தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை செங்குறிச்சி மாமரத்துப்பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது 42). இவர் அப்பகுதியில் கத்தியை காட்டி மிரட்டியும் பொது மக்களிடம் ஆபாசமாகவும் பேசி மிரட்டி வந்துள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த அவரை வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவி அறிவுரையின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் தனிப்படை போலீசார் கைது செய்து வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் மற்றும் டி.எஸ்.பி. துர்கா தேவி உத்தரவின் பேரில் வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் தலைமையிலான போலீசார் ஜாமீனில் வந்து தலைமறைவானர்கள் உள்பட 40 பேரை கைது செய்து சிறையில் அடைத்த னர்.

இதனால் கடந்த சில நாட்களாக வடமதுரை மற்றும் சுற்றுப்புற கிரா மங்களில் குற்ற சம்பவங்கள் குறைந்து வருகிறது என பொதுமக்கள் தெரிவித்த னர்.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ப்பட்ட நிலையில் பொது மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். குற்றச்சம்பவங்கள் தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News