உள்ளூர் செய்திகள்
பெருந்துறை அருகே தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறையை அடுத்துள்ள வாய்க்கால் மேடு, கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 25). இவர் தனது தாய், தந்தையருடன் குடியிருந்து வந்து சென்டரிங் வேலை செய்து வந்தார். இவருடைய தாய் தந்தையரும் கட்டிட கூலி வேலை செய்து வருகின்றனர்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான செந்தில்குமார் சரியாக வேலைக்கு செல்லாமலும், வீட்டில் இருந்த தாய், தந்தையுடன் அடிக்கடி சண்டையிட்டும் வந்துள்ளார். கடந்த 4 நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் அவருடைய தாய், தந்தை காஞ்சிக்கோவில் பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று விட்டனர். மாலை அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது செந்தில்குமார் வீட்டில் உள்ள விட்டதில் சேலையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதைபார்த்த அவர்கள் செந்தில்குமாரை கீேழ இறக்கி உடனடியாக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் செந்தில் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.