உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே கோவில் விழாவில் மோதல்: கல்லூரி மாணவர் உள்பட 29 பேரிடம் விசாரணை
கிருஷ்ணகிரி அருகே கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 29 பேரிடம் விசாரணை நடக்கிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே யுள்ள பறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பையன் (வயது 19). கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்.கல்லூரி மாணவரான சக்திவேல் ஆட்டோவும் ஒட்டி வருகிறார். இந்நிலை யில் தண்டேகுப்பம் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் இவர்கள் 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இது 2 தரப்பினர் இடையேயான மோதலாக மாறியது. இந்த மோதலில் காயம் அடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த சின்னப்பை யன் தந்த புகாரின் பேரில் சக்திவேல்,ராஜேஷ்குமார், பிரபு, ஜெயராஜ்,சக்திவேல், அப்பு ,ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை கிருஷ்ண கிரி டவுன் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதேபோல மாணவர் சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில் சின்னப்பை யன், சுரேஷ்குமார் உள்ளிட்ட 29 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக மாண வர்கள் இடையே ஏற்படும் மோதல் சமூக ஆர்வலர்கள் இடையே வேதனையை ஏற்படுத்திவருகிறது.