உள்ளூர் செய்திகள்
வருஷாபிஷேக விழா நடந்த போது எடுத்தபடம்.

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் வருஷாபிஷேக விழா

Published On 2022-06-03 09:56 GMT   |   Update On 2022-06-03 09:56 GMT
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
தென்திருப்பேரை:

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் இன்று காலை வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள், கோமாதா பூஜை நடைபெற்றது.

 அதனைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலை வலம் வந்து கோவில் கோபுர கலசத்தின் மீது பூசாரிகள் ராமஜெயம், ஆதிநாராயணன் அகியோர் தலைமையில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.
 
அதன்பின் விநாயகர், அம்மன், நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.  சிறப்பு பூஜையை தொடர்ந்து மதியம் 1மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார்கள், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர். வருஷாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News