உள்ளூர் செய்திகள்
கர்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தி.மு.க மருத்துவ அணியினர் வழங்கினர்.
தஞ்சாவூர்:
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாவட்ட தி.மு.க மருத்துவ அணி சார்பில் தஞ்சை அரசு மருத்துமனையில் உள்ள 300க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் புத்தாடைகள், பழங்கள், ரொட்டிகள் என பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.
தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளரும், துணை மேயருமான அஞ்சுகம் பூபதி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் மருத்துவ மனைக்கு தேவையான உபகரணங்கள், 300 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு புத்தாடைகள், கர்ப்பிணி பெண்களுக்குபழங்கள், ரொட்டிகள் உள்ளிட்டவை களை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் து.செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவி உஷா புண்ணியமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் மேத்தா, உஷா, கலையரசன், மகளிர் அணி கமலா ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.