உள்ளூர் செய்திகள்
கைது

திருத்தணி அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்- 4 பேர் கைது

Published On 2022-06-01 14:39 IST   |   Update On 2022-06-01 14:39:00 IST
திருத்தணி அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தணி:

திருத்தணி அடுத்த தாழ்வேடு கிராமத்தில் அரசு அனுமதியுடன் செம்மரம் வளர்க்கப்பட்டு இருந்தது. அதனை வனத்துறையிடம் உரிய அனுமதி பெற்று வெட்டி விற்பனை செய்து இருந்தனர்.

பின்னர் அதன் வேர்களை பிடுங்கி குடோனில் வைத்திருந்தனர். அவற்றை விற்பனை செய்ய உரிய அனுமதி பெறாத நிலையில் விற்பனை செய்து தருவதாக அதன் உரிமையாளரிடம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் தெரிவித்து இருந்தார்.

மேலும் அவரது ஏற்பாட்டில் ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியை சேர்ந்த நாராயண ரெட்டி, துரைவேல், சீனு ஆகியோர் செம்மர வேர்கள், கட்டைகளை வேனில் ஆந்திராவுக்கு கடத்தி சென்றனர்.

இது பற்றி அறிந்த திருப்பதி செம்மரம் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வேனுடன் செம்மரக் கட்டைகள், வேர்களை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக சங்கர், நாராயணரெட்டி உள்பட 4 பேரையும் கைது செய்தனர். ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள், வேர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News