உள்ளூர் செய்திகள்
புகையிலை பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நடைபயணம்
தஞ்சையில் புகையிலை பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நடைபயணம் நடத்தப்பட்டது.
தஞ்சாவூர்:
இந்திய சுதந்திரத்தின் வைரவிழா கொண்டாட்ட ங்களின் ஒரு பகுதியாக, சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் அலுவலகம், மத்திய மறைமுக வரிகள் வாரியம் (சி.பி.ஐ.சி), நிதி அமைச்சகம், இந்திய அரசு, சார்பில் தஞ்சாவூரில் நடைப்பயணம் நடத்தப்பட்டது.
இந்த நடைப்பயணம் தஞ்சை சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் அலுவலகம் முதல் பெரிய கோவில் வரை நடத்தப்பட்டது. உலக புகையிலைஎதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, புகையிலைப் பயன்பாட்டி னால்ஏற்படும் தீமைகள் குறித்து பொதும க்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும். இந்த நிகழ்வை மருதுபா ண்டியர் நிறுவனங்களின் தலைவர் மற்றும்நிர்வாக அறங்காவலர் மருதுபாண்டி யன் தொடக்கி வைத்தார்.
இந்த நடை பயணத்தில் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோர், வர்த்தகர்கள், பட்டயக் கணக்காளர்கள், வரி ஆலோசகர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் குடிமக்கள் பங்கேற்றனர்.
ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறையின் உதவி ஆணையர் மீனாட்சி சுந்தரம், கண்காணிப்பாளர்ஆ ய்வாளர், மற்றும் ஜி.எஸ்.டி இன் பிற அதிகாரிகள், பங்கேற்பாளர்களுக்கு ஜி.எஸ்.டி வரியின் நன்மை கள் மற்றும் புகை யிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீங்கான விளைவுகள் பற்றி எடுத்து கூறினர்.
இதில் 75- க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள்நடைப்ப யணத்தில் கலந்துகொ ண்டனர்.