உள்ளூர் செய்திகள்
பேராலயத்தில் மாதாவிற்கு தங்க கிரீடத்தால் முடி சூட்டும் நிகழ்ச்சி நடந்தது.

வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி

Published On 2022-05-31 14:47 IST   |   Update On 2022-05-31 14:47:00 IST
வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவிற்கு தங்க கிரீடத்தால் முடிசூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வேளா ங்கண்ணி பேராலயத்துக்கு வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர். இந்த பேராலயத்தில் மே மாதம் மாதாவிற்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகி றது.

அதனையொட்டி கடந்த மாதம் 7-ந்தேதி முதல் சனிக்கிழமை தோறும் மாதாகுளத்தில் திருப்பலி தேர்பவனி மற்றும் நிவ்ய நற்கருணை ஆசீர் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி மாதாகுளத்தில் நடைபெற்றது. 

இதில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதாவின் உருவ சிலைக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் தங்ககிரீடம் சூடப்பட்டது. 

இதையடுத்து தேர்பவனி, திவ்ய நற்கருணை, ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News