உள்ளூர் செய்திகள்
உத்தரவு

வரிபாக்கிகளை செலுத்த ஆணையாளர் உத்தரவு

Published On 2022-05-31 13:05 IST   |   Update On 2022-05-31 13:06:00 IST
நிதி பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் வரிபாக்கிகளை செலுத்த ஆணையாளர் உத்தரவு விடுத்துள்ளார்.
ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம்   2-ம் நிலை நகராட்சியாக விளங்கி வருகிறது. இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  அதிக அளவில் வணிகர்களாகவும், வியாபாரிகளாகவும் உள்ளனர். 

இந்த நகராட்சியில் கொரோனா காலத்திற்குப் பிறகு முறையாக செலுத்த வேண்டிய வரிகளை பொதுமக்களும், வணிகர்கள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் செலுத்தாமல் இழுத்தடித்து வருகின்றனர். 

இதனால் நகராட்சிக்கு ரூ.2 கோடிக்கு மேல் வரி பாக்கி நிலுவையாக உள்ளது. இதனால் நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதே நிலை தொடர்ந்தால் நகராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் என்பது கேள்விக்குறியாகிவிடும். அதுபோல் ராமேசுவரம் நகர் பகுதிகளுக்கு செய்ய வேண்டிய அத்தியாவசிய பணிகள் மற்றும் பொது சுகாதார பணிகள் செய்ய முடியாமல் முடங்கி விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

ராமேசுவரம் நகராட்சிக்கும் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி மற்றும் வரியில்லா பாக்கிகள் ஆகியவற்றை முழுமையாக நகராட்சிக்கு செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார். வரி செலுத்தாமல் இருந்தால் அவர்களின் பெயர் பட்டி யலிடப்பட்டு   நகர் பகுதி முழுவதும் வைக்கப்படும் என்றும் மூர்த்தி தெரிவித்தார்.
Tags:    

Similar News