உள்ளூர் செய்திகள்
திறந்த வெளி கிணற்றுக்கு மூடி அமைப்பு

தியாகதுருகத்தில் திறந்த வெளி கிணற்றுக்கு மூடி அமைப்பு

Published On 2022-05-29 18:04 IST   |   Update On 2022-05-29 18:04:00 IST
குழந்தைகள் கிணற்றுக்கு சென்றால் தவறி விழுந்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என மாலை மலரில் செய்தி வெளியானது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தைமேடு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பிள்ளையார் கோவில் எதிரே திறந்தவெளிக் கிணறு ஒன்று உள்ளது.

இந்த கிணற்றிலிருந்து தண்ணீர் மின் மோட்டார் மூலம் அதன் அருகே உள்ள மினி டேங்க்கிற்க்கு செல்கிறது. இந்த மினி டேங்க் தண்ணீரை இப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கிணறு குடியிருப்புகளுக்கு மத்தியில் தாழ்வான நிலையில் அமைந்துள்ளது. மேலும் சுமார் 25 அடி ஆழமான கிணற்றில் தற்போது தண்ணீர் முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதன் அருகில் குழந்தைகள் மையம் அமைந்துள்ளது.

எனவே குழந்தைகள் கிணற்றுக்கு சென்றால் தவறி விழுந்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என மாலை மலரில் செய்தி வெளியானது. இந்நிலையில் நேற்று தி.மு.க. நகர செயலாளர் மலையரசன், பேரூராட்சி மன்ற தலைவர் வீராசாமி, துணைத்தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலையில் திறந்தவெளி கிணற்றுக்கு மூடி அமைக்கப்பட்டது. அப்போது வார்டு கவுன்சிலர்கள் குட்டி, சிலம்பரசன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News