உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மேட்டுப்பாளையம் வாராந்திர ரெயில் 2-ந் தேதி முதல் சங்கரன்கோவிலில் நின்று செல்லும்

Published On 2022-05-29 13:24 IST   |   Update On 2022-05-29 13:24:00 IST
ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கோவை ரெயில் நிலை யங்களில் நின்று செல்லும்.

திருப்பூர்:

திருநெல்வேலி மேட்டுப்பாளையம் வாராந்திர ரெயில் (எண்.06030) வருகிற 2-ந் தேதி முதல் சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். அதுபோல் மேட்டுப் பாளையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் ரெயில் (எண்.06029) வருகிற 3-ந் தேதி முதல் சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

அந்த ரெயில்கள் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கோவை ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News