உள்ளூர் செய்திகள்
வெயில்

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும்

Published On 2022-05-27 08:40 GMT   |   Update On 2022-05-27 08:40 GMT
சென்னை மீனம்பாக்கத்தில் இன்று காலை 102.38 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 100.94 டிகிரியும் வெப்பம் பதிவாகி இருக்கிறது.
சென்னை:

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் வெயில் சுட்டெரித்தாலும், நகரின் பல இடங்களில் லேசான மழையும், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் கூறும்போது, ‘அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல் வெப்பமும் உயர்ந்து காணப்படும். இது இன்னும் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை தொடர வாய்ப்பு உள்ளது. ஜூன் மாதத்தில் வெப்பநிலை உயர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை சென்னை மீனம்பாக்கத்தில் 102.38 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 100.94 டிகிரியும் வெப்பம் பதிவாகி இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரி கூறும்போது, ‘வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழைபெய்து வருகிறது. 1.5 கி.மீட்டர் உயரத்தில் சுழற்சி உள்ளது. இது இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு நீடிக்கும். நகரின் சில பகுதிகளில் அதிக வெப்பமும், பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடனும் காணப்படும்.

நேற்று வலுவான காற்று வீசாததால் புறநகர் பகுதிகள் மற்றும் பக்கத்து மாவட்டங்களில் மழை மேகங்கள் நகரவில்லை.

இன்று மேக கூட்டங்கள் நகரை நெருங்கி வரலாம். இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் இன்னும் 10 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் 100 டிகிரி வரை இருக்கும்’ என்றார்.

Tags:    

Similar News