உள்ளூர் செய்திகள்
ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-05-26 14:11 IST   |   Update On 2022-05-26 14:11:00 IST
தலைமை தபால் நிலையம் முன்பு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி:

மத்திய-மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை வகித்தார். அஞ்சல்துறை சங்க தலைவர் முத்து, செயலாளர் கலியமூர்த்தி, தொலைதொடர்பு துறை சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், மாநில நிர்வாகி சக்திவேல், தமிழக போக்குவரத்துத்துறை சங்க செயலாளர் தமிழ்வாணன், சி.ஐ.டி.யூ. போக்குவரத்து ஊழியர் சங்க செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தமிழக போக்குவரத்து துறை 2015 முதல் வழங்க வேண்டிய 78 மாத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவக்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களின் குடும்பத்துக்கு குறைந்த பட்சம் ரூ.7 ஆயிரத்து 850 ஓய்வூதியம் வழங்க வேண்டும். 

மாதந்தோறும் காலதாமதமின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதிய பண பலன்களை ஓய்வுபெற்றவுடன் உடனடி யாக வழங்க வேண்டும். நிலுவை ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அஞ்சல்துறை ஓய்வூதிய சங்க நிர்வாகி தியாகராஜன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News