உள்ளூர் செய்திகள்
விழாவில் கலந்துகொண்ட விவசாயிகள், மாணவர்கள்.

சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் உலக தேனீ தின விழா

Published On 2022-05-26 06:29 GMT   |   Update On 2022-05-26 06:29 GMT
காரைக்குடி அருகே உள்ள கல்லுப்பட்டி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உலக தேனீ தின விழா கொண்டாடப்பட்டது.
சிவகங்கை

காரைக்குடி அருகே உள்ள கல்லுப்பட்டி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உலக தேனீ தின விழா கொண்டாடப்பட்டது.

இதில் முன்னோடி விவசாயிகளை வரவேற்றும் மற்றும் விழா நிகழ்வுகளின் சுருக்கத்தையும் பயிர் பாதுகாப்பு துறை தலைவர் பேராசிரியர் விஷ்ணுபிரியா பேசினார்.முதல்வர்  கருணாநிதி தலைமை தாங்கி தேனீக்களின் முக்கியத்துவத்தையும்  எடுத்துரைத்து தேனீ வளர்ப்பு பற்றிய கையேட்டினை வெளியிட்டார்.

முதல் பிரதியை கல்லல் முன்னோடி விவசாயி அசோகன் பெற்றுக்கொண்டார்.பின்னர் கலப்படமற்ற தேனை கண்டறியும் முறையை கல்லூரியின் இயக்குனர் கோபால் விளக்கினார்.  விவசாயத்தில் மகரந்தச்சேர்க்கை மூலம் விளைச்சலை அதிகரிக்க தேனீக்களின் முக்கிய பங்கையும், தேனீ வளர்ப்பு பற்றிய தொழில்நுட்பங்களையும்   பேராசிரியர்கள் கோபாலகிருஷ்ணன், மதியழகன் ஆகியோர் விளக்கினர்.மாணவர்களின் கண்காட்சிகள் இடம்பெற்றன.

 இதில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.இறுதியாண்டு மாணவி திவ்யா நன்றி கூறினார்.
Tags:    

Similar News